ஓருதனி முதலவனருள் நனி ஓங்க
ஓதுநல் மாணவர் ஓங்க
கல்முனைப் பதினியில் வாய்ந்திடும் ஸாஹிறா
கற்றிடும் மாணவர் நாமே
ஆய்ந்த கலையுணர்ந் தவனியில் மிளிர
அல்லாஹ்வைத் துணை கொள்ளுவோமே
முhண்புறு மாணவர் நாமே இம்
மதிமிகப் படைத்தவர் நாமே
சேர்ந்து பயின்றிடுவோமே
ஜெயமே…. ஜெயமே…. ஜெயமே…. (ஒருதனி)
உடலுளம் உயிர்வளம் உறுகலை தெரிவோம்
உயர்ந்தவரெனச் சிறந்திடுவோம்
திடமனமுடையவராய்த் திகழ்ந்திடுவோம்
தேசத்தியாகிகளாவோம்
வழங்கிய வாய்மை காப்போமே - இம்
மாசகற் பணிபுரிவோமே
நாளுமிவை கடனாமே
ஜெயமே…. ஜெயமே…. ஜெயமே…. (ஒருதனி)
நல்லவரோடுறவாடி நடப்போம்
நண்பர் விரும்பவிருப்போம்
எல்லவரும் மிக இன்புறுவே என்
றெண்ணி வியன்றிடுவோமே
மானிடர் யாவரும் சமமே - இம்
மானில மீதினில் நிஜமே
அல்லாஹ்வினுரையிதுவாமே
ஜெயமே…. ஜெயமே…. ஜெயமே…. (ஓருதனி)